பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து - துணை முதல்வர் உதயநிதி..!  - Seithipunal
Seithipunal


சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால், அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க மோடி அரசு முயற்சி செய்கிறது.

கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்க பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சி நடக்கிறது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை இந்தியா கூட்டணி உயர்த்தி பிடித்து வருகிறது.

அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தி.மு.க. சட்டத்துறை மாநாட்டின் கருத்தரங்கு, கலந்துரையாடல் நடக்கிறது" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy chief minister uthayanithi stalin speech in dmk law department conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->