திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பொதுவாகவே பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் பவுர்ணமி நாட்களில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். 

இதனால் பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அதன் படி, இன்று பவுர்ணமி என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகமாக காணப்பட்டது. 

மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன்கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடற்கரையில் பக்தர்கள் தங்க வேண்டாம் என்று பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees not allowed stay thiruchenthur beach for rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->