ஐஆர்பி காவலர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய டிஜிபி.! - Seithipunal
Seithipunal


 நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு டிஜிபி ஷாலினி சிங் அவர்களுக்கு ஐஆர்பி காவல்துறையில் பணியாற்றும்  காவலர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இதுகுறித்து புதுச்சேரி ஐஆர்பி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் டிஜிபி ஷாலினி சிங் அவர்களுக்கு வழங்கியுள்ள மனுவில்,மதிப்பிற்குரிய டிஜிபி மேடம் அவர்களுக்கு,ஐஆர்பி காவல்துறையில் புதுச்சேரியில் பணியாற்றும் நாங்கள், இருபது ஆண்டுகளாக Guard Duty மற்றும் Sentry Duty ஆகிய பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம். HC(SG), ASI(SG) பதவி உயர்வு பெற்றிருந்தும், வயது முதிர்ந்திருந்தும், தொடர்ந்து இந்த பணியில் செயல்பட்டு வருகிறோம். இது தொடர்பாக பலமுறை எங்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தாலும், Guard Duty மாற்றம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எங்களுக்கு மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சினையை மாண்புமிகு டிஜிபி ஷாலினி சிங் மேடம் அவர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் துரித நடவடிக்கையாக டிஜிபி தலைமை அலுவலகத்திலிருந்து முதல் கட்டமாக மாற்றி அமைத்ததற்கு, ஐஆர்பி சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். மேலும், அனைத்து Guard Duty பணிகளையும் மாற்ற உத்தரவிட்டுள்ளீர்கள் என அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாங்கள் எங்கள் பணியை நேர்மையுடனும், உற்சாகத்துடனும் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு டிஜிபி ஷாலினி சிங் மேடம் அவர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என ஐஆர்பி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DGP fulfills long standing demand of IRB cops


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->