திண்டுக்கல்| நண்பர்களுக்கு வீடியோ பகிர்ந்தால் திமுக நிர்வாகிக்கு நேர்ந்த பகீர் சம்பவம்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்: தீப்பாச்சியம்மன் கோவில் கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது30). இவர் திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இவரது மனைவி பவதாரணி, மகன் வேதமித்திரன் (வயது 2) . இவர் குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வ.உ.சி. நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

சரவணன் தினமும் மாலையில் தனது மகனை அழைத்து சென்று, அண்ணாநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிவிட்டு செல்வது வழக்கம். 

அதே போல் நேற்று இரவு தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மைதானத்திற்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒரு மர்ம கும்பல் சரவணனை திடீரென வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்து விட்டார். இதை பார்த்த அவரது மகன் அச்சத்தில் கத்தி கூச்சலிட்டு அழுதார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாக்கிருந்த காட்சிகள் அடிப்படையில்  போலீசார் குற்றவாளிகளை தேடினர். 

குற்றவாளிகள் சிவப்புநிற காரில் வந்ததை உறுதி செய்த போலீசார், கார் மாவட்ட எல்லையைவிட்டு செல்லாமல் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக்மு கமது, முகமதுமீ ரான், கலில்அகமது உள்பட 8 பேரும் அருப்புக்கோட்டை நீதிமனறத்தில் சரண் அடைந்தனர். 

போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்து சரண் அடைந்த 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓரினசேர்க்கை தொடர்பான வீடியோவை தனது நண்பர் மூலம் சரவணன் முகநூலில் பதிவிட்டதாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தியபிறகு முழு விவரங்கள் தெரிய வரும், என்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindigul DMK executive murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->