உள்ளூர் மக்களும் இனி ''இ-பாஸ்'' தேவை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal



தற்போது கோடை காலம் என்பதால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். 

இதனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை காலகட்டமான மே மாதத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறையை உயர் நீதிமன்றம் அமல்படுத்தி உள்ளது. 

வெளியூர்களிலிருந்து ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெறும் நடைமுறை அமலில் உள்ள நிலையில் கொடைக்கானல் செல்லும் உள்ளூர் மக்களுக்கும் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்பவர்கள் epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலமாக இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த இபாஸ் நடைமுறை மே 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Local people need e Pass


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->