சோழர்களின் அடையாளம் புலி கொடி! படையெடுத்துச் சென்ற தமிழர்களே ஆண்டுள்ளனர்! புதிய சர்ச்சையை கிளப்பும் இயக்குனர் கௌதமன்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் கௌதமன்!

இயக்குனர் கௌதமன் தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் கோயம்பேடு கீரை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்க சென்று இருந்தார். அதில் கீரை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முறைப்படி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி அவரிடம் செய்தியாளர் ஒருவர் கருத்து கேட்டார்.

அதற்கு பதில் அளித்த இயக்குனர் கௌதமன் "பொன்னியின் செல்வன் வெற்றி மற்றும் வணிகரீதியான வசூல் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செய்கிறது என்பதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் ஒரு வரலாற்றைச் சொல்லும் பொழுது, 50 ஆயிரம் ஆண்டுகள் தமிழர்களின் வரலாற்றைச் சொல்லும் பொழுது, 350 ஆண்டுகள் வரலாறு கொண்ட சோழ பேரரசின் வரலாற்றைச் சொல்லும் பொழுது தமிழராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் தமிழ் உணர்வோடு சொல்ல வேண்டும். 

ஆளுமைத் தன்மையோடும் ஆண்மைத் தன்மையோடும் ஒரு படைப்பை சொன்னால் தான் அந்த படைப்பு முழுமை அடையும். சோழர்களின் அடையாளமான புலிக்கொடி கூட காட்ட முடியவில்லை என்றால் எதற்காக இந்த படைப்பை கையில் எடுக்க வேண்டும். இந்தப் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் "விஜயாலய சோழனுக்கு முந்தைய தலைமுறை தெலுங்கர்கள்" என்று சொல்கிறார். இவர்கள் எந்த வரலாற்று ஆய்வின் முடிவில் இதை சொல்கிறார்கள். தஞ்சையை தலைமையகமாகக் கொண்டு ராஜராஜ சோழனும், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு ராஜேந்திர சோழனும் உலகை ஆண்டுள்ளனர். படையெடுத்துச் சென்ற அனைத்து பகுதிகளையும் தமிழர்களே ஆண்டுள்ளனர். சோழர்களின் படைகளுக்கு தமிழர்கள் தான் தலைமை தாங்கி வழிநடத்தினார்கள் என ஏன் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாத இவர்கள் ஏன் இந்த படைப்பை கையில் எடுக்க வேண்டும். இவர்களின் நோக்கம் என்ன. 

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சைவம் வைணவம் என்று தான் இருந்தது ஆங்கிலேயர் வந்த பிறகு தான் இந்து என்ற வார்த்தையே வந்தது. இந்து என்ற வார்த்தையை இவர்கள் கொண்டாடும் சங்கராச்சாரியாரே எதிர்க்கிறார். வெற்றிமாறன் சொன்னால் ஏன் கோபப்படுகிறார்கள்.

இந்த படத்தில் தமிழர் என்று சொல்ல முடியவில்லை, புலி கொடியை காட்ட முடியவில்லை பிறகு ஏன் தமிழர்களின் படைப்புகளை கையில் எடுக்க வேண்டும். பேன் இந்தியா திரைப்படமாக காட்டிக் கொள்ள தமிழர்களின் வரலாற்றை மறைத்து இந்துத்துவத்தை படத்தில் திணித்துள்ளனர். ஆதித்ய கரிகாலன் கொன்றது யார்? பாண்டியர்கள் கொன்றார்களா? வட தமிழகத்திற்கும் தென் தமிழகத்திற்கும் கலவரம் உண்டு பண்ணிக் கொண்டே இருப்பீர்களா. கதை எழுதும்போது கல்கி தனது கற்பனைக்கு ஏற்றாபோல் மாற்றி எழுதியிருக்கலாம். ஆனால் தமிழனை மற்றொரு தமிழன் கொன்றான் என சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. முடிந்தால் ஆதித்ய கரிகாலனை யார் கொன்றார் என்ற உண்மையை சொல்லி பாருங்கள்.

தமிழன் தன் வரலாற்றை சொல்லவில்லை என்றால் தமிழர் அல்லாதவர்கள் தன்னுடைய வரலாறாக மாற்றுவார்கள். சோழர்களின் பொன்னியின் செல்வன் என சொல்லும் இவர்கள் ஏன் புலி கொடியை காட்டவில்லை. படையில் யார் நின்றார்கள் என சொல்லவில்லை. படையில் நின்றது தமிழர்கள் என சொல்லுங்கள். சோழர்களுடன் நின்றது பள்ளர்கள், பறையர்கள், வன்னியர்கள், தேவர்கள் என சொல்லுங்கள். தமிழ் அரசர்களுக்கு உறுதுணையாக தமிழர்கள் இருந்தார்கள் என சொல்லுங்கள். இல்லை என்றால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கடுமையான விளைவுகளில் சந்திக்க நேரிடும்" என கௌதமன் பேசினார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து நேர்மையாக விமர்சனங்களும் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் கௌதமம் புதிய பிரச்சனை ஒன்றை கிளப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director gowthaman spoke about Ponniyin selvan and director manirathinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->