தீவிரமடையும் பருவமழை - சென்னைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையொட்டி சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வரும் 16 ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கடந்த காலத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. 

பருவமழை மீட்புப் பணிகளில் ஈடுபட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, திருச்சியில் மூன்று பேரிடர் மீட்புக் குழுக்கள் குழுக்கள், கோவையில் மூன்று குழுக்கள், மேட்டுப்பாளையத்தில் மூன்று குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் என்று மொத்தம் 450 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disaster Response Team come in chennai for red alert


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->