பட்டம் வாங்கிய மேடையில் ஆளுநரிடம் மனு கொடுத்த வாலிபர் - கோவையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதையடுத்து ஒவ்வொரு மாணவராக பட்டம் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது பட்டம் வாங்க வந்த ஆராய்ச்சி மாணவரான பிரகாஷ் என்பவர் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற்றதும், அவர் மனு ஒன்றை அளித்தார். 

அதனை ஆளுநரும் பெற்றுக்கொண்டார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மனு அளித்தது தொடர்பாக ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "எனது பெயர் பிரகாஷ். நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்றேன். 

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இரண்டு விடுதிகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அங்குள்ள கழிவறை மழை பெய்தால் ஒழுகுகிறது. மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. 

இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சில துறை மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விளையாட அனுமதிக்கிறார்கள். நாங்கள் வைவாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். 

சில பயிற்சியாளர்கள் ஆராய்ச்சி மாணவர்களை அவர்களது வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனக்கு இதனால் பிரச்சினை இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்" என்று ஆளுநரிடம் மனு அளித்தேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student petition to governor on stage in coimbatore barathiyar university


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->