போலி ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ்! ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்!
Disqualification of panchayat council chairperson who won election by giving fake caste certificate
வேலூர் மாவட்டத்தில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் தோளப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற கல்பனா வேட்புமனு தாக்குதலின்போது ஆதிதிராவிடர் என போலிச் சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்யராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணையில் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் போலியாக ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதனையடுத்து அவர் மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு அவரின் காசோலை அதிகாரமும் கடந்த ஆண்டு பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்ட விசாரணைக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து கல்பனாவை நேற்று தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Disqualification of panchayat council chairperson who won election by giving fake caste certificate