"என் தம்பி ஞானசேகரன்" சர்ச்சை! நான் அந்த ஞானசேகரன் இல்லை - சபாநாயகர் அப்பாவு பேட்டி!
DMK Appavu video issue
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "கடந்த 10-ந்தேதி, ஊடகவியலாளர் நிரஞ்சன் எழுதிய இந்தியாவின் வெற்றி எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் எனக்கு துண்டு போட முயன்றார். அவர் பெயர் கேட்டேன், அவர் ஞானசேகரன் என்று சொன்னது, நான் பயமாக இருக்கிறது என்றேன். பின்னர் அவர், 'நான் அந்த ஞானசேகரன் இல்லை' என்று பதிலளித்தார்.
அந்த நபர் என் தம்பி ஞானசேகரன் பெயரை கொண்டவர்தான் இந்த தவறு செய்துள்ளார். இதனால்தான் மூன்று ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகளை இதற்காக பொறுப்பாக வைத்தோம் என்று சொன்னேன்.
ஆனால் நான் குறிப்பிட்ட வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருவரையும் தவறாக ஒப்பிடுகிறார்கள். ஆனால், அந்த வீடியோவில் கூட இதுபோல பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால் அதை முழுமையாக பாருங்கள்” என்று அப்பாவு தெரிவித்தார்.