பாஜக வேட்பாளருக்கு அடுத்த சிக்கல்.. தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்.!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளிடமிருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நைனா நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இத்தகைய சூழலில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடமிருந்து ரூபாய் 4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே நயனார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும். 

அதேபோன்று தமிழ்நாட்டில் போட்டியிடும் அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK complaint against BJP candidate nainar nagenthiran in ECI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->