ரூ.25 கோடி கடனுக்கு ரூ.86 லட்சம் கமிஷன்.!! மோசடி வழக்கில் திமுக நிர்வாகி கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னை வில்லிவாக்கம் பகுதியில் லயன் முத்து என்றால் மிகவும் பிரபலம். அவரை தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள். ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த இவர் வில்லிவாக்கம் பகுதி அமைப்பாளராக இருந்துள்ளார். கழுத்து நிறைய நகை அணிந்து உலா வருவது, பல லட்சம் ரூபாய் செலவில் பிறந்த நாள் கொண்டாடுவது என தன்னை பெரிய ஆள் என காட்டிக்கொள்வார். போயஸ்கார்டனில் அலுவலகம் நடத்தி வரும் இவர் வங்கிகளில் கடன் பெற்றுத்தருவை தொழிலாக செய்து வருகிறார்.

இந்நிலையில் தொழில் அதிபருக்கு 25 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.86 லட்சத்தை அட்டையை போட்ட திமுக நிர்வாகி முத்துவேல் மற்றும் கூட்டாளி பெண்ணையும் போலீசார் கைது செத்துள்ளனர் . சென்னை கொடுங்கையூர், காமராஜர் சாலையைச் சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணகுமார்.  இவர் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி நாறும் நிலையில் தொழில் விரிவுபடுத்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி முத்துவேல் என்பவரை அணுகி உள்ளார். 

அப்போது முத்துவேல் கிருஷ்ணகுமாரிடம் 25 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருகிறேன் என கூறியதோடு அதற்கு ரூ.86 லட்சம் கமிஷனாக பெற்றுள்ளார். அனால் வங்கி கடன் பெற்றுத் தராமல் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார் முத்துவேல். இதுகுறித்து சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமார் புகார் அளித்ததை அடுத்து விசாரணையில் இறங்கிய  போலீசார் வில்லிவாக்கம், ஜெகநாத நகரைச் சேர்ந்த முத்துவேல், நங்கநல்லுார் நேரு காலனியைச் சேர்ந்த ஏஞ்சலினா கிறிஸ்டி நிஷா ஆகியோரை நேற்று கைது செத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK executive arrested Fraud case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->