தி.மு.க. சார்பில் இலங்கை மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.!
DMK leader MK Stalin 1 cr donate for srilanka
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.
அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்தியய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக தி.மு.க. சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். மேலும், தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
DMK leader MK Stalin 1 cr donate for srilanka