திமுக அமைச்சர் ஊழல்? ஆதாரம் தேவையில்லை - தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அமலாக்கத் துறை தரும் ஆதாரம், ஆவணங்கள் தேவையில்லை என்று, நீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த தற்போதைய திமுக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கும் அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்குசொத்து சேர்த்ததாக அமைச்சர் உள்ளிட்ட 7 பேர் மீது திமுக ஆட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்து வரும் நிலையில், இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்க்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.செல்வம் நேற்று விசாரணை செய்தார்.  அப்போது “அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி அதிகமான சொத்து சேர்த்ததற்கான ஆதாரம், ஆவணங்கள்,  கூடுதல் சாட்சியங்கள்" இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தரப்பு மற்றும் அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அமலாக்கத் துறை அளிக்கும் ஆவணங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்று வாதிட்டனர். 

இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Anitha Radhakrushnan case ED case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->