தமிழகத்தில் "இதற்கு" தடை விதிக்க வேண்டும் - முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பறந்த அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார். 

அப்பாவு எழுதி உள்ள அந்த கடிதத்தை தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. 

கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது.

இதைத் தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு 08.09.2022 அன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் விளைவாக இந்த சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. 

மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. சீன லைட்டர்களுக்கு தடை விதித்தாலும், வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். 

குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்" என்று முதலமைச்சருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் அப்பாவு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA assembly speaker Appavu letter to CM Stalin for china lighter ban


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->