ரத்த வாந்தி, கேன்சர் - தீவிர சிகிச்சை பிரிவில் திமுக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ரத்த வாந்தி எடுத்ததால் தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பாக சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவ குழு ஒன்று புகழேந்திக்கு சிகிச்சை அளிப்பதற்காக விழுப்புரம் விரைந்துள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் திமுக எம்எல்ஏ புகழேந்தி அனுமதிக்கப்பட்டிருப்பது, திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி. அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசியான இவர், கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நல குறைவால் உயிரிழந்ததால் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், இவர் திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அதே விக்ரவாண்டி தொகுதியில் களமிறங்கிய புகழேந்தி சுமார் 9500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Pugazhenthi in hospital 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->