இதுதான் கடைசி, மீண்டும் கேட்க கூடாது! அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனை அடுத்து, இதுதான் கடைசி, மீண்டும் கால அவகாசம் கேட்கக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி, ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கும், பின்னணியும்:

கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இது குறித்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி இடையீட்டு மனுவாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்தும், இந்த வழக்கில் தன்னை விடுக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க கோரி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Senthil Balaji ED case chennai High court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->