பணி பெண்ணை ஜாதி ரீதியாக துன்புறுத்தி திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் நீதிமன்றத்தில் ஆஜர்! - Seithipunal
Seithipunal


பணி பெண்ணை ஜாதி ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த கருணாநிதியின் மகன் அண்ட் மதிவாணன். இவருடைய மனைவி மெல்லினா. இருவரும் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தன்னை துன்புறுத்துவதாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவுகளிட்ட பல்வேறு பிரிவுகளின் திருவான்மியூர் போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த ஜனவரி மாதம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் வெளிவந்தனர்.

இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை  சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆண்ட் மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெல்லினா அகியோருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இருவரும் ஆஜரான நிலையில் இதனை தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணை அடுத்த மாதம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA son and daughter in law appear in court for caste based harassment of working woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->