திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தமிழகம், இந்தியாவுக்காக நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்புவோம் என்று இந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத மசோதாக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தமிழக ஆளுநரின் அத்துமீறல்கள் உள்ளிட்டவை குறித்தும் குரல் எழுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு, ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு குறித்தும் கேள்வி எழுப்ப தீர்மானம், 

தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து தொழிலாளர்களை வஞ்சிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கூட்டாட்சி என்று கூறிவிட்டு மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக ஒரு தீர்மானத்தையும், கட்சி தாவல் தடை சட்டத்தை காட்சி பொருளாக்கி வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானமும், நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்ச்சிக்கு குடியரசு தலைவரை அழைக்காமல் புறக்கணித்ததை கண்டித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MPs meet for Upcoming Parliament session


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->