#BREAKING || திமுகவின் முன்னாள் ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைமை நிலை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு குறித்து ஆபாசமான வார்த்தைகளால் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பலதரப்பட்ட மக்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு கடுமையாக திமுகவையும் அதன் தலைவர் மு.க ஸ்டாலினையும் விமர்சனம் செய்ததோடு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

மேலும் பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்த நிலையில் திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் எழுந்த நிலையில் தமிழக ஆளுநர் குறித்து நேற்றைய கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆபாச வார்த்தைகளால் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK obscenity speaker Sivaji Krishnamurthy arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->