தி.மு.க பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை.! - Seithipunal
Seithipunal


வேலூர், காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த அசோகன், வேலூர் மாநகர மாவட்ட தி.மு.க பொருளாளராகவும் இந்து சமய அறநிலை துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். 

இவர் அரசு ஒப்பந்ததாரராகவும் தோட்டப்பாளையம் பகுதியில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் வருமானவரித்துறை அதிகாரிகள் தி.மு.க நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் ஆகியோர் இருந்துள்ளனர். இந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்கள் போன்றவை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

சுமார் 2:30 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் பிரிண்டிங் பிரசின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி அசோகனுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து தி.மு.க நிர்வாகி அசோகனின் மகன், முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை செய்தனர். பணம் கிடைக்காததால் வங்கி ஆவணங்கள் மட்டும் சரி பார்த்து விட்டு சென்றார்கள் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk official income tax department raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->