சாதியை திமுக வளர்க்கிறது! ஆர்எஸ்எஸ் தீண்டாமையை எதிர்கிறது! - Seithipunal
Seithipunal


திராவிட கழகங்கள் இந்து மதத்தை மட்டுமே அரசியல் லாபங்களுக்காக இழிவுபடுத்தி வருகின்றனர்!

கோவையில் நடைபெற்ற அண்ணாமலை தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பேசியதற்கு பாஜகவினரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொண்ட அனைவரும் முழு பரிசோதனை செய்த பிறகு உள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தும் வளாகம் சுற்றிலும் மோப்ப நாய்களின் துணையுடன் சோதனை நடத்தப்பட்டது. 

பொது கூட்டத்தில் வானதி சீனிவாசன் பேசுகையில் " ஆ.ராசாவின் கருத்தின் மீது எங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் திராவிட இயக்கங்கள் குறிப்பாக திராவிடர் கழகம்  தொடர்ச்சியாக வந்த திராவிட முன்னேற்றக் கழகங்கள் இன்று வரை ஒரு மதத்தை மட்டுமே குறிவைத்து இழிவாக பேசி வருகின்றனர். இந்து கடவுல்களை இழிவு படுத்துவதும், அவர்கள் நம்பிக்கைகள் கிண்டல் செய்து பேசுவதும் அவர்கள் செய்வது அரசியல் லாபத்திற்காக மட்டுமே. இன்று நேற்று இல்லை, அன்றையிலிருந்து அவர்கள் இயக்கத்தின் முன்னோடி என்று தந்தை பெரியாரின் பெயரை சொல்கிறார்களே அவர்களின் காலத்திலிருந்தே இந்து  எதிர்ப்பு  என்பதை தங்களது கொள்கையாக வைத்துள்ளனர்.

தமிழகத்திலே பாரதிய ஜனதா கட்சி எங்கே என்று கேட்டவர்கள் எள்ளி நகையாடியவர்கள் எல்லாம், இங்கே வந்து விடுவார்கள் என்றும் அந்த இயக்கத்துக்கு நீங்கள் போய்விட வேண்டாம் என்றும் மக்களை பார்த்து சொல்கின்ற நிலைமைக்கு பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது.

தீண்டாமை என்கின்ற கொடுமை எதிர்த்து 100 ஆண்டுகளாக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் இருப்பது எங்கள் ஆர்எஸ்எஸ்,பாஜக, இந்து முன்னணியினர் இயக்கம் தான்.

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஜாதி பார்த்து வேட்பாளர் நிறுத்திக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் எங்கள் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் 30 வருட காலம் ஒரே இயக்கத்தில் அண்ணன் தம்பியாக பழகினால் கூட அவர் என்ன ஜாதி என்று எங்களுக்கு தெரியாது. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை" என வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

சாதியை பார்த்து நாங்கள் பழகவில்லை என கூறும் இந்த பாரதிய ஜனதா கட்சியில் தான் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, பட்டியலின பிரிவு என சாதி வாரியாக தனித்தனி அணியினை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK promotes caste RSS faces untouchability


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->