செந்தில் பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்! நீதிமன்றத்தில் குமுறல்! தீர்ப்பில் குழப்பம்!
DMK Senthil balaji case Chennai Court Bail ED Case
பிணை உத்திரவாத தொகை தாக்கல் செய்வது தொடர்பான குழப்பத்தால், செந்தில் பாலாஜி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிரதான வழக்கும், அமலாக்கத்துறையின் வழக்கும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதில், நீதிமன்ற காவலை நீட்டிக்க கூடிய வழக்கில், நடவடிக்கையை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி கார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சில குழப்பங்கள் உள்ளதால், அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளது என்று, செந்தில் பாலாஜியின் காவல்நீட்டிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிணை உத்திரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், பிணை உத்தரவாதங்களை அமலாக்கத் துறை விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அப்போது, விசாரணை அதிகாரி முன்பு பிணைத்தொகையை எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்று செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியது.
இன்று செந்தில் பாலாஜியை வெளியே விடக்கூடாது என முடிவு செய்துவிட்டுது போல் செயல்படு செயல்படுகிறீர்கள் என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Senthil balaji case Chennai Court Bail ED Case