நேரடியாக நாங்களே கண்காணிக்கிறோம்! செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
DMK Senthilbalaji Case SC Order Sep 2
செந்தில் பாலாஜியின் வழக்கில் நடுநிலையான அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்தது ஏன் என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் வழக்காமல் ஆறு மாதங்களாக ஆளுநர் நிலுவையில் வைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
அப்போது, குறுக்கிட்ட மனுதாரர் (பாலாஜி) தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழ்நாடு அரசு முட்டுக்கட்டையாக செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அரசியல்வாதிகள் தொடர்புடைய அனைத்து வழக்குகளுமே சிக்கல் நிறைந்ததாக உள்ளதாகவும் நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர்.
இதுபோன்ற அரசியல்வாதிகளின் அனைத்து வழக்குகளுக்கும் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து விசாரணை நடத்துவது என்பது இயலாத காரியம் என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது,
அப்போது நீதிபதிகள், சிறப்பு வழக்கறிஞர் தனது பணியை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணை எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து அவ்வப்போது அறிக்கை பெற்று, மேற்பார்வை செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடு, செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கின் நிலை குறித்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary
DMK Senthilbalaji Case SC Order Sep 2