#ராமநாதபுரம் || உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வீடு திரும்பிய மருத்துவர் தீடீர் மரணம்.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பிய போது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுர மாவட்டம் காவலர் குடியிருப்பகு பகுதியில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் பால்பாண்டியன் என்பது மகன் வசந்த் கிருஷ்ணன் என்பவருக்கும் மருத்துவர் சிவ லட்சுமி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது ‌ 

சுவலட்சுமி ராமநாதபுரத்தில் உள்ள சரியான மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில் 3 மாத கர்ப்பிணயாக இருப்பதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக வசந்தகிருஷ்ணனும் தன் மனைவியுடன் இருந்து வரும் நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வசந்தகிருஷ்ணன் அருகில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். 

அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்படவே கீழ விழுந்த உடன் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக வசந்த கிருஷ்ணன் இறந்ததாக தெரிவித்துள்ளனர். மூன்று மாத கர்ப்பிணி மனைவி இருக்கும் நிலையில் வசந்தகிருஷ்ணன் உயிரிழந்திருப்பது அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor died who returned from gym in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->