மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி!...நோயாளிகள் கடும் அவதி! - Seithipunal
Seithipunal


மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து, போடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில்,  தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அரசு மருத்துவ சங்கங்களின்  கூட்டமைப்பினர்  அறிவித்து உள்ளனர். அந்த வகையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை 10 மணி வரை பணி நிறுத்த போராட்டத்தில் போடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctors strike echoes patients are suffering


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->