தொடரும் நாய்க்கடி சம்பவம் : 100 வயது மூதாட்டியை கடித்து குதறிய நாய்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நாயிடம் கடி வாங்கிய சிறுமி தற்போது, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நாய் ,பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதற்கு கட்டாயமாக லைசன்ஸ் பெற வேண்டும் என்று அறிவித்திருந்தார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று சென்னை ஆலந்தூரில் 11 வயது சிறுவனை நாய் ஒன்று கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தேனி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 100 வயது மூதாட்டி பாப்பாத்தி என்பவர் நாய் கடித்து குதறி உள்ளது. அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர் மூதாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக சங்கரன்கோவில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog bite incident continues Dog bites 100 year old woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->