டிமாண்டான கழுதை பால்.. இஷ்டத்துக்கு விலை சொல்லும் உரிமையாளர்கள்.! விலையைக் கேட்டு வாய்ப்பிளக்கும் மக்கள்.!
Donkey milk rate Hike make shock
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சளி காய்ச்சல் இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு பலரும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுப்பது நல்லது என்று கூறி அதை விற்று வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் கழுதை பாலுக்கு கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் தொழுதூர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஊர் ஊராக சென்று கழுதை பாலை வெற்றி வருகின்றனர். ஒரு சங்கு பாலின் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து அவர்களிடம் விசாரித்ததில் மூன்று மாதங்களுக்கு முன் குமரி மாவட்டத்திற்கு வந்ததாகவும் இங்கே கழுதை பாலின் விற்பனைக்கு கடுமையான டிமாண்ட் இருப்பதாகவும் மக்களுடைய தேவைக்கே பணம் கொடுத்தாலும் எங்களால் கழுதை பாலை கொடுக்கமுடியவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
English Summary
Donkey milk rate Hike make shock