தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு.!
Don't special in summer holidays in namakkal district warning
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த நாமக்கல் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதன்படி சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் 04286-232094, 9080838995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Don't special in summer holidays in namakkal district warning