ஆன்லைன் ஷேர் மார்க்கெட் நம்ப வேண்டாம் ..புதுச்சேரி இணையவழி குற்றபிரிவு காவல் எச்சரிக்கை!
Dont trust online share market.. Puducherry Cyber Crime Branch Police Alert!
சமூக வலைதளங்களில் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் அதிக லாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என புதுச்சேரி இணையவழி குற்றபிரிவு காவல் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்த முருகானந்த என்பவர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வந்துள்ளார். அவரை ஒரு whatsapp குழுவில் இணைத்துள்ளனர் அதில் ஷேர் மார்க்கெட்டிங் டிரேடிங் எப்படி செய்வது மற்றும் அதிக லாபம் வரும் இணையதளங்களை பற்றி கூறியுள்ளனர். அதனை உண்மை என்று நம்பி இணையவழி குற்றவாளிகள் ஏற்படுத்திய இணையதளத்தில் ஷேர் மார்க்கெட்டிங் டிரேடிங்கில் ரூபாய் ஏழரை லட்சம் முதலீடு செய்து உள்ளார். பின்னர் இவரின் கணக்கை முடக்கி பணம் எடுக்க முடியாதவாறு குற்றவாளிகள் செய்துள்ளனர். இவர் ஏமாற்றப்பட்டது உணர்ந்து இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆகையால் இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை செய்வது என்னவென்றால் சமூக வலைதளங்களில் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் அதிக லாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். டிமேட் வங்கி கணக்கு இல்லாமல் டிரேடிங் செய்யும் முறையை முற்றிலும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றோம் என கூறியுள்ளார்.
English Summary
Dont trust online share market.. Puducherry Cyber Crime Branch Police Alert!