திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி, "ஒருத்தர் லெட்டர் கொடுத்தாராம் நிலக்கரித்துறை அமைச்சருக்கு, லெட்டர் கொடுத்தாராம் யாரு? அண்ணாமலை. தேர்தல் பணிக்காக கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை. நான் இங்கு காலை அறிக்கை விடுகிறேன். மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜோஷ் பிரகலாத் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
உடனே ஒரு கடிதத்தை தயார் செய்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மத்திய அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார், நேற்று அமைச்சர் டிவிட் போடுகிறார், நாங்கள் அந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களையும் ஏலப்பட்டியலில் இருந்து எடுத்து விட்டோம் என்கிறார். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், நிலக்கரி சுரங்கம் ஏலப்பட்டியில் இருந்து மட்டும் தான் எடுத்துள்ளார்கள். நாளை வேறு யாராவது நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுத்து நடத்தலாம். என்எல்சிக்காரன் கூட எடுத்து நடத்தலாம்.
![](https://img.seithipunal.com/media/dsfgwreshg.jpg)
இதுக் கூட யாருக்கும் தெரியவில்லை. இதற்கு எல்லோரும் வெற்றி வெற்றி என பதிவு போட்டுக் கொண்டிருக்கிறான், என்னால்தான் வெற்றி, உங்களால் தான் வெற்றி என்று, இதில் என்ன வெற்றி இருக்கு? முதலில் சொன்னவனே நான் தான், நான் கூட அதை வெற்றி என்று சொல்லவில்லை. இன்னும் ஏமாற்றம் என்று தான் சொல்லி வருகிறேன். இன்னும் ஆர்டர் கூட கையில் வரவில்லை வெறும் டுவிட் மட்டும் தான் போட்டு இருக்கிறார். அங்கு நிலக்கரி சுரங்கம் வராது என்று மத்திய அமைச்சர் உறுதி அளிக்கவில்லை.
அண்ணாமலை சார்ந்த கட்சியே நிலக்கரி சுரங்கத்திற்கு ஏலம் விடுவார்களாம். அதற்கு பிறகு அவர்களே அதை எதிர்த்து கடிதம் கொடுப்பார்களாம், அதற்கு அப்புறம் லெட்டர் கொடுத்த பிறகு அவர்களே அந்த வெற்றியை கொண்டாடுவார்களாம். இது என்ன..? இதையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இது ஒரு பக்கம் நடக்கிறது.
அடுத்தது இந்த பக்கம் திமுகவினர், எங்களுக்கு வெற்றி, எங்கள் முதலமைச்சருக்கு வெற்றி, எங்கள் தலைவருக்கு வெற்றி என்று சொல்லிக்கொள்கிறார்கள். 'நாங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம். நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம். இதுதான் எங்களுடைய கொள்கை முடிவு என்று முதல்வர் ஸ்டாலின் (தமிழக அரசு) சொன்னால், மத்திய அரசு ஒரு சென்ட் நிலத்தை எடுத்து விட முடியுமா? அதை விட்டுவிட்டு, மத்திய அமைச்சர் ஏதோ ஒரு டிவிட் போட்டாராம், அதை நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் இவர்கள் அனைவரையும் (என்எல்சி நிர்வாகம்) விரட்டி அனுப்பி வைப்பேன். தமிழக சட்டப்பேரவையில் நிலக்கரி சுரங்கம் மட்டுமல்ல, விவசாயத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்திற்காகவும் ஒரு சென்ட் நிலம் கூட கொடுக்க மாட்டோம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவேன். உண்மையில் உங்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், அதை நீங்கள் சட்டமாக ஆக்க வேண்டும். ஒரு வருடமாக போராடிக் கொண்டிருக்கிறேன். அதனை மீறியும் இரண்டு அமைச்சர்கள் விவசாயிகளின் நிலத்தை மிரட்டி பறித்துக் கொண்டிருக்கின்றனர்.
![](https://img.seithipunal.com/media/dfhrth.jpg)
அதில் ஒருவர் வேளாண்துறை அமைச்சர். அவர் வேலை என்ன என்று அவருக்கே தெரியவில்லை. வேளாண்துறை அமைச்சரின் வேலை என்ன? வேளாண்மையை வளர்க்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காவல் துறையை அனுப்பி ஊர் ஊராக சென்று 'உன் நிலத்தை ஒழுங்கா கொடுத்துவிடு. இல்லையென்றால் அவ்வளவுதான், தொலைத்து விடுவேன்' என்று போலீசை வைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
எதற்காக என்எல்சிகாரனுக்காக. அவன் ஒரு படுபாவி, 66 வருடமாக நிலத்தை சுரண்டி, மக்களை அழித்து, மண்ணை அழித்து, விவசாயத்தை அழித்து, நீரை அழித்து, வாழ்வாதாரத்தை அழித்து, கடலூர் மாவட்டத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான் இந்த என்எல்சி காரன். ஒரு காலத்தில் சொன்னார்கள் என்எல்சிக்காரன் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கொடுக்கிறான். அவன் மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடும் என்று, அதெல்லாம் அந்த காலம்.
முன்பு நீங்கள் ஒரு சாதாரண செல்போனை தான் வைத்திருந்தீர்கள். இப்போது யாராவது சாதாரண ஒரு செல்போனை வைத்திருக்கிறீர்களா? ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்கள். அதே தான் இதுவும். என்எல்சி நிர்வாகம் அந்த காலத்தில் நமக்கு தேவைப்பட்டது. ஆனால் இப்போது தேவையில்லை. அதை விட நமக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) மூலம் மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான உச்சபட்ச மின்சார தேவை 18000 மெகாவாட்ஸ். ஆனால் நாம் உற்பத்தியை இரண்டு மடங்கு செய்து கொண்டிருக்கிறோம். இதில் என்எல்சி காரன் பங்கு எவ்வளவு தெரியுமா நமக்கு கொடுக்கிறான்! வெறும் 800 மெகாவாட்ஸ் மட்டும் தான்.
![](https://img.seithipunal.com/media/sdafgwer5gy.jpg)
இந்த 800 மெகாவாட்ஸ் மின்சாரத்திற்காக நம்முடைய நிலத்தை பிடுங்கி, நீரை உறிஞ்சி, அதை கடலுக்கு அனுப்பி, சுற்றுச்சூழலை மாசு படுத்தி, நமக்கு வேலை வாய்ப்பு தராமல் ஏமாற்றி, 66 வருடங்களாக இந்த மண்ணை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு தான், இந்த தமிழக அரசு நிலத்தை பிடுங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தை என்எல்சிக்காரன் அழித்துவிட்டான். ஆனால் திமுக அரசு இன்றும் அவர்களுக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கிறார்கள் என்றால், இது எவ்வளவு பெரிய துரோகம், குற்றம். it's a crime என்று நான் சொல்வேன்.
காலநிலை மாற்றம் மிக முக்கியமான பிரச்சனை. இன்னும் பத்து வருடத்தில் தமிழகத்தில் உணவு பற்றாக்குறை வரும் என்று ஐபிசிசி சொல்கிறான். ஐபிசிசி என்றல், ஐநா சபையின் கீழ் இயங்குகின்ற intergovernmental panel on climate change குழு. 195 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் அந்த குழுவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் உலகம் முழுவதும் இந்த குழு ஆராய்ச்சி செய்யும் .ஆராய்ச்சி செய்த பிறகு அவர்கள் சொல்வார்கள், இந்த நாட்டில் வறட்சி வரும், இந்த நாட்டில் வெள்ளம் வரப்போகிறது, இந்த நாட்டில் உணவு பற்றாக்குறை வரும், இந்த நாட்டில் வெப்பம் அதிகமாகும், சூறாவளி வரும் போன்ற எச்சரிக்கைகளை கொடுப்பார்கள். அவர்கள் தான் இப்போது சொல்கிறார்கள் தமிழ்நாட்டில் இன்னும் பத்து வருடத்தில் உணவு பற்றாக்குறை வரும் என்று.
உணவு பற்றாக்குறை வரும் என்றால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏக்கர் நிலத்தையும் நம் பாதுகாக்க வேண்டும். நிலத்தை வைத்து தான் நாம் விவசாயம் செய்ய முடியும். அதுதான் நமக்கு சோறு போடும். அந்த நிலத்தை என்எல்சி காரனிடம் கொடுத்தால் அவன் அழித்து விடுவான். பிறகு நீ எப்படி சோறு சாப்பிடுவாய்? அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுச் செல்ல வேண்டும். நல்ல நிலம் தான். அதுவும் டெல்டாவில் இருக்கின்ற நிலம். கடலூர் மாவட்டமும் டெல்டாவில் இருப்பது திமுகவினர்களுக்கு தெரியவில்லை. இவர்களைப் பொறுத்தவரை டெல்டா என்றால் தஞ்சாவூர், திருவாரூர் தான்.
திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பாதி பகுதியும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் முழுவதும் டெல்டா மாவட்டங்கள். மேலும், பாண்டிச்சேரியின் காரைக்கால் பகுதியில் பாதி டெல்டா பகுதி உள்ளது. இவ்வளவு பெரிய பகுதிதான் டெல்டா பகுதி, இவர்களுக்கு தஞ்சாவூரில் நடந்தால் தான் கோபம் வரும்.
![](https://img.seithipunal.com/media/fghetj.jpg)
முதலமைச்சர் அவர்களே மத்திய அரசு அறிவித்துள்ள இந்த மூன்று நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமல்ல, இன்னும் மூன்று இருக்கிறது. என்எல்சியின் மூன்றாவது சுரங்கம், வீராணம் புதிய நிலக்கரி திட்டம், பாளையங்கோட்டை புதிய நிலக்கரி திட்டம் ஆகிய இந்த மூன்று திட்டங்களையும் சேர்த்து, இனி நிலக்கரி சுரங்க திட்டங்களுக்கு நிலம் கொடுக்க மாட்டோம், தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்று சட்டமன்றத்தில் நீங்கள் அறிவிக்க வேண்டும்.
அதுவரை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும். அடுத்து வரக்கூடிய போராட்டங்கள் சாதாரண போராட்டமாக இருக்காது. மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்த போகிறோம். இப்போது ஓரளவுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள், கடலூர் மாவட்டத்தை காக்க வர வேண்டும்.
சீக்கிரமாக இன்னொரு போராட்டத்தை அறிவிக்க போகிறேன். அப்போது கடலூர் மாவட்டத்தை சுற்றி உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் வரவேண்டும். போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அப்போது என்ன நடக்கிறது என்று பார்த்துவிடலாம்.., வருகிறீர்களா..? (கண்டிப்பாக வருவோம் என்ற முழக்கம் ஒலிக்கிறது). ஏனென்றால், இது திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்தின் பிரச்சினை இல்லை. இது நம்முடைய தமிழ்நாட்டின் பிரச்சனை. ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளில் இருந்தும் வரவேண்டும். ஒரு போராட்டத்தை அறிவிக்கப் போகிறேன்.
![](https://img.seithipunal.com/media/fgaherh.png)
இரண்டு தினங்களுக்கு முன்பு கூட முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அதில் மூன்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறேன்.
1. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரி சுரங்கத் திட்டம், வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரி சுரங்கத் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரி சுரங்கத் திட்டம், வடசேரி நிலக்கரி சுரங்கத் திட்டம் ஆகிய 6 நிலக்கரித் திடங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது.
2. என்.எல்.சி 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காக உழவர்களுக்கு சொந்தமான 13000 ஏக்கர் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் மூலமாக கையகப்படுத்தி வழங்கும் பணி நிறுத்தப்படும்.
3. என்.எல்.சி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் ஆகியவற்றால் கடலூர் மாவட்டத்திலும், அதையொட்டிய மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கும் சமூக, சுற்றுச்சூழல், நீர்வள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை அளிப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்களைக் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைக்கும்.
![](https://img.seithipunal.com/media/dsfgrewh'.jpg)
ஆகிய இந்த 3 அறிவிப்புகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாங்கள் வெளியிட வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். தொடர்ந்து போராட்டம் நடக்கும். இந்த அறிவிப்பு வருகின்ற வரை போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். இது நம்முடைய வாழ்வாதாரம் மற்றும் வருங்கால பிரச்சனை இதை விடப்போவதாக இல்லை.
என்னடா இவன் திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க வந்துவிட்டு, கடலூர் மாவட்டம் என்எல்சி விவகாரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறானே என்று நினைக்காதீர்கள். அது நம்முடைய பக்கத்து மாவட்டம். நீங்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மூன்று புதிய சுரங்கங்களுக்கான ஏலத்தை ரத்து செய்ததாக மத்திய அமைச்சரின் டிவிட்டை இவர்கள் வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அந்த ஏலப் பட்டியலில் இருந்து அந்த மூன்று பகுதிகளும் நீக்கப்பட்டது தெரியுமா? ஏற்கனவே மூன்று முறை இந்த மூன்று பகுதிகளுக்கும் ஏலம் விட்டார்கள். அப்போது அதை யாருமே எடுக்க வரவில்லை. சரி யாருமே எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே எடுத்தார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்காகவோ, தமிழ்நாட்டிற்காகவோ இல்லை. விவசாய பிரச்சனை பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. இதுதான் உண்மையான காரணம். இதை கூட தெரியாமல் மற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்" என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.