பள்ளி மாணவியை பின்தொடர்ந்தது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கு சென்ற மாணவியை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வேன் ஓட்டுனரை போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஓட்டுநரான பாண்டியன் (26) என்பவர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனரான பாண்டியனை கைது செய்தனர். அதன்பின்னர், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver sexually harassed for school student was arrested in Pokcho.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->