ஈரோட்டில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை - காரணம் என்ன?
drone ban two days in erode for cm mk stalin come
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதில் ஒருபகுதியாக, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அந்த வகையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமையான நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான பொதுக்கூட்டம் ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது, ஈரோட்டில் இன்றும், நாளையும் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
drone ban two days in erode for cm mk stalin come