மாமல்லபுரத்தில் ஜூலை 24 - 26ல் டிரோன் பறக்க தடை!!
Drone flying banned in Mamallapuram from July24 to 26
கடந்த 2022 டிசம்பா் 1ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த ஜி20 நாடுகளின் பல்வேறு அரசுகளின் தலைவா்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு புதுடெல்லியில் வரும் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இந்த உச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் விருந்தினா்கள் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்தியாவில் ஜி 20 மாநாட்டுக்காக 200க்கும் மேற்பட்ட தயாரிப்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது
அந்த வகையில் ஜி20 மாநாட்டு நிகழ்வுகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு வெளிநாட்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜி 20 மாநாடு தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Drone flying banned in Mamallapuram from July24 to 26