காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை - காரணம் என்ன?

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்தது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் வருகிற 15-ந்தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். 

முதல்வரின் வருகையை முன்னிட்டு மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்தத் தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drones banned in Kanchipuram for 2 days


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->