மாடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 45 பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாமர தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 21 வயதுடைய இளைஞர் ஒருவர் மது போதையில் வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென அந்த இளைஞர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் இளைஞரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனிடையே அந்த இளைஞர் கல்லால் அந்த பெண்ணை உடலில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் கதறி துடித்த அந்தப் பெண் ரத்த களத்தில் கீழே விழுந்தார். பெண்ணின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த எலக்ரீசியனாக வேலை செய்யும் கார்த்தி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drunken boy attack sexual Harrasment to girl in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->