கனமழையின் எதிரொலி..!! சுருளி அருவியில் குளிக்க தடை..!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த மேகமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதியான மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்களாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்தது. 

கம்பம் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலை கம்பம் கிழக்கு வனசரகர் பிச்சைமணி தலைமையிலான வனத்துறையினர் அருவிக்குச் சென்று நீரின் அளவை பார்த்தனர். சுருளி அருவியின் நீர் தடுப்புகளைத் தாண்டி கொட்டுவதால் குளிக்க தடை விதித்தனர். அருவியல் விழும் தண்ணீரின் அளவைப் பொறுத்தே வரும் நாட்களில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் அருவியில் குளிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to heavy rain bathing in Suruli Falls is prohibited


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->