நீலகிரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு! நாளை முதல் அமலுக்கு வரும் போக்குவரத்து மாற்றங்கள்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

கோடை காலம் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பகுதியான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும் அனுமதிக்கப்படும் என்றும், இந்த போக்குவரத்து விதிமுறைகள் நாளை முதல் பின்பற்றப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to increase of tourists traffic made to one way


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->