ஓசூர் அருகே திடீர் நிலநடுக்கம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே அஞ்செட்டி என்ற பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோன்று அம்மாவட்டத்தில் உள்ள மாடக்கல் அருகே உள்ள வனப்பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி அந்த பகுதிக்கு அதிகாரிகள் விரைந்துச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட அறிவிப்பில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆகவும், பூமிக்கடியில் 5 கி.மீ., நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நில அதிர்வுகள் அரிது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட்ட தேவையில்லை" என்று அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் அஞ்செட்டி துணை வட்டாச்சியரான பன்னீர் செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள அறிக்கையில், ‘அஞ்செட்டி கிராமத்தில் 2.9 ரிக்டர் அளவுகோலில் பிற்பகல் 12.48 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வால் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படவில்லை’ என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in osur krishnagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->