மின் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்கலாம்.! கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த வகையில் 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துவோருக்கு செலவு இரட்டிப்பாகும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து தற்போது பொது மக்களிடம் கருத்து கேட்பதற்காக கோவையில் ஆகஸ்ட் 16-ம் தேதி எஸ்.என்.ஆர் கல்லூரியில் கூட்டம் நடைபெறுகிறது. மதுரையில் ஆகஸ்ட் 18-ம் தேதி தள்ளாக்குளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. 

சென்னையில் ஆகஸ்ட் 22-ம் தேதி கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். மின் வாரியம் பொது மக்களிடம்  குறைகளை கேட்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eb bill price hike issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->