அடுத்த ட்விஸ்ட்.. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு.. ECI மீண்டும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது 7 மணி நிலவரம் படி 72% வாக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் நள்ளிரவில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 69.76% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சம் மத்திய சென்னை தொகுதியில் 53.9 சதவீதமும் பதிவானதாக குறிப்பிட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் முரண்பட்டு அறிவிக்கப்பட்டதால் பலத்த சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை வரை செய்தியாளர்களை சந்திக்காமல் முழுமையாக ரத்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்த நிலையில் நேற்று மாலை வரை செய்தியாளர்களை சந்திக்காமல் அந்த சந்திப்பை முழுமையாக ரத்து செய்தார். 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் மூன்றாவது முறையாக மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின்படி 69.7.2% பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று வெளியான அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.2% வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 79.21% வாக்குகளும், சிதம்பரத்தில் 76.37 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI officially announced 69 72 percentage vote polling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->