இளையராஜா பாடல்கள் மீது உரிமை கோரா முடியாது - எக்கோ நிறுவனம் பரபரப்பு வாதம்.!
eco company say music director Ilayaraja songs cannot claimed
சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எக்கோ நிறுவனம் சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார். அதனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.
மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை.ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என்றுத் தெரிவித்துள்ளது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
English Summary
eco company say music director Ilayaraja songs cannot claimed