குழந்தையை இழந்த குடும்பத்திற்கு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி பதிவு!
Edappadi Palanisamy Twitter
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, குழந்தையை இழந்து வருந்தும் குடும்பத்திற்கு உரிய உதவி தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, எழும்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று, பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது, இந்த திமுக அரசின் அலட்சியத்தால் உயிரிழந்து விட்டது.
இந்த செய்தியை நான் அறிந்ததும் மிகவும் வருந்தினேன். குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் குழந்தையை இழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அந்த குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த ஆட்சியில் அலட்சியம் மற்றும் அக்கறை இன்மைக்கு உதாரணமாக உள்ளது. இந்த ஆட்சியால் ஒரு பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை.
இந்த அரசு, மக்களை காக்கும் கடமையில் இருந்து ஒவ்வொரு நாளும் தவறுவதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
Edappadi Palanisamy Twitter