விசிக துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் ED ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆர்.ஏ.புரம், தேனாம்பேட்டை, வேப்பேரி உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 6 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் பிரின்ஸ் கார்டன் 11வது தளத்தில் மகாவீர் இரானி என்பவர் வீட்டில் சோதனை நடத்துகின்றனர்.

அதேபோன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் செல்வராஜ் என்பவர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு‌ விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edraid on Vck deputy general secretary aathav Arjun places


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->