தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு - அதிரடி உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை.!
education department announce 1st to 5th class final exam date
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு - அதிரடி உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை.!
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பன்னிரெண்டு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பமாகி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பமாகி உள்ளது. இந்தத் தேர்வு வருகிற 20 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற குழப்பம் நிலவி வந்தது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் பதினேழாம் தேதி முதல் ஏப்ரல் இருபத்தொன்றாம் தேதிக்குள் முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
நான்கு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஏப்ரல் பத்து முதல் ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதிக்குள் உள்ளூர் நிலைக்கேற்ப இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்குமான கடைசி வேலைநாளாக ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதி இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
English Summary
education department announce 1st to 5th class final exam date