முதல் நாளே ஆசிரியர்களை விரட்டும் அதிரடி உத்தரவுகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


முதல் நாளே ஆசிரியர்களை விரட்டும் அதிரடி உத்தரவுகள் - நடந்தது என்ன?

பள்ளிக் கல்வித்துறை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளே காலாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், வழங்கப்பட்ட இலவச நோட்டு புத்தகங்கள், வருகை பதிவு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் பதிவு உட்பட பிற வழக்கமான எமிஸ் பதிவுகளை மதியம் 1:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டது.

இந்தப் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் குறித்த விவரங்களை 'எமிஸ் டீம்' கல்வித்துறை வாட்ஸ்ஆப் தளத்தில் வெளியிட்டது. இதைப்பார்த்த மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். 

இந்த செயலால் பள்ளியில், முதல் நாளே கற்பித்தல் பணியை தள்ளிவைத்த ஆசிரியர்கள், அதிகாரிகள் கேட்கும் தகவல்களை பதிவேற்றம் செய்வதில் தீவிரம் காட்டினர். இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது:- "கற்பித்தல் பணியை பாதிக்கும் 'எமிஸ்' பதிவேற்றத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் உறுதியளித்தார்.

ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளி திறந்த முதல் நாளிலே 'எமிஸ்' பதிவேற்றம் தொல்லை ஆரம்பமாகி விட்டது. விபரங்களை எமிஸில் பதிவேற்றிய பின், அதில் குறிப்பாக மதிப்பெண் விவரப் பட்டியல் விபரங்களை டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கும் கூடுதலாக அனுப்ப வேண்டியுள்ளது.

அமைச்சர், செயலாளர் தலைமையில் நடக்கும் மண்டல ஆய்வுக் கூட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்ட முதல் மூன்று மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் பரிசு, விருது வழங்கப்படுகிறது. இந்த விருது தேர்வுக்கு 'எமிஸ்' பதிவேற்றம் தான் பிரதானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த விருதுக்காக சி.இ.ஓ.,க்கள் ஆசிரியர்களை விரட்டுகின்றனர். ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யும்போது 'எமிஸ்' தளமே முடங்கி விடுகிறது. அதோடு மல்லுக்கட்டுவதில் தினம் மனஉளைச்சலால் தவிக்கிறோம். மாணவர்களுக்கு பாடமும் நடத்த முடிவதில்லை. இந்தப் பிரச்னைக்கு எப்போது தான் 'விடியல்' கிடைக்குமோ? என்று புலம்பியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department order to teachers quarterly exam mark uploade in emis


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->