மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்று தருவதாக மோசடி - பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வித்துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்று தருவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் பதிவு திட்டம் உட்பட அனைத்து செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சில மோசடி கும்பல்கள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அணுகி கல்வித்துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்று தருவதாகக் கூறி, வாட்ஸ்-அப் மூலம் கியூஆர் கோடு அனுப்பி அதை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை கிடைக்கும் என நம்பவைத்து ஏமாற்றி அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். 

இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்த சுமார் 10 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி, பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடத்தப்படும் போது ஊக்கத்தொகை தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு அரசு தரப்பில் யாரும் பேசமாட்டார்கள். 

அவ்வாறு போன் செய்யும் நபர்களிடம் வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்று அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பெற்றோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுசார்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department warned no send money to other peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->