பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி.!
Education minister anbil Mahesh infected influenza fever
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து தமிழகத்தில் 1 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு காய்ச்சல் தீவிரமாக இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல், உடல் சோா்வு இருந்ததால் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு மருத்துவா்களின் ஆலோசனையின்படி, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், எச்1என்1 என்ற இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருக்கிறார் என்றும் 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.
English Summary
Education minister anbil Mahesh infected influenza fever