தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.1,309 கோடி பறிமுதல்!! - Seithipunal
Seithipunal


நாடும் முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 28ம் தேதி வரை சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருள்கள் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,ரூ.179.91 கோடி பணம் , ரூ.8.65 கோடியிலான மதுபானங்ககள் மற்றும் ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள பொருட்கள் என ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Flying Squad raid crores confiscated


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->