சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து - காரணம் என்ன?
electric train service cancelled in chennai for renovation work
ஒவ்வொரு மாதமும் ரெயில்வே துறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த நாட்களில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதுடன் ரெயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில், சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், நாளையும் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. இதனால், சில மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "சென்னை கடற்கரையில் இருந்து இன்று, நாளை மதியம் 12.28, 12.40, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும், கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இதே தேதிகளில் காலை 10.40, 11, 11.30, மதியம் 12 உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.15, 1.15, 1.30, 2 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து மதியம் 12.05, 12.35, 1 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
electric train service cancelled in chennai for renovation work